மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க தமிழக அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ள இடங்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, April 30, 2020

மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க தமிழக அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ள இடங்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க, தமிழக அரசுக்கு,சுகாதாரத் துறை பரிந்துரைத்துள்ளது. 
நீலகிரி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, ஈரோடு, வேலுார், கரூர், தேனி ஆகிய மாவட்டங்களில், 10 நாட்களுக்கு மேலாக, புதிதாக தொற்று பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

கடலுார், துாத்துக்குடி, நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில், தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.


 எனவே, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க, தமிழக அரசுக்கு, சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், கிராமப்புறங்களில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. எனவே, கிராமப்புறங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்த வாய்ப்புள்ளது. ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்; மதுரை, கோவை, திருப்பூர் மாநகராட்சிகள் மற்றும் செங்கல்பட்டு நகராட்சியில் மட்டும், ஊரடங்கை நீட்டிக்க, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். 


சென்னையில் பாதிப்பை கட்டுப்படுத்த, பொது சுகாதாரத் துறையில், 150 டாக்டர்கள்; 150 நர்ஸ்கள்; 10 இணை, துணை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள்; 20 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், கூடுதலாக களமிறங்கப்பட்டுள்ளனர்.


சென்னையில், கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த, பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், சென்னை அபாய கட்டத்திற்கு செல்லும் வாய்ப்புள்ளது

. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்; தேவைப்பட்டால், கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment