சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 15, 2020

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். மக்கள் காரணம் இன்றி வெளியே வர வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட தகவல்:

'தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இயல்பான வெப்பநிலையை விட பல்வேறு மாவட்டத்தில் 100 முதல் 102 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை பதிவாகி இருந்தது.

இந்நிலையில் இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மக்கள் காரணமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.


குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்களும் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்'.

இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment