ஊரடங்கு தளர்வு வழிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 15, 2020

ஊரடங்கு தளர்வு வழிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு

ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கடைபிடிக்க வேண்டியவை மற்றும் 20 ம் தேதிக்கு பின்னர் சில தளர்வுகளுக்கான வழிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 2ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது மேற்கொள்ளப்படும் வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு

: உணவங்கள், மெக்கானிக் கடைகள்

* பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.

* மே 3 வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக்கூட்டங்களுக்கு தடை தொடரும்


.* அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது

.* இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி

.* மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும்

.* மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி

.* தொற்று அதிகமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல்வைக்கப்படும்

.* மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை.மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.


* தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் இயங்க அனுமதி

.* தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும்

.* ஏப்.,20ம் தேதிக்கு பிறகு கட்டுமான பணிகளுக்கு அனுமதி

.* சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி

.* சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். மாஸ்க் அணிந்து தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் பணியாற்ற அனுமதி

.* ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க் அணிவது கட்டாயம்.

* மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி.

* விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி.

* சிறு குறு தொழிலில் ஈடுபடுவோர் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம்

.* தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு பணியாற்ற வேண்டும்.

* ஐடி நிறுவனங்கள் அதனை சார்ந்த நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன்

*சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் ஏப்.,20 முதல் இயங்கலாம்.

ஆனால், சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

.* கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதி. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததாக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது

.* மக்கள் நெருக்கம் குறைவான பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கலாம்

* அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்கள் திறக்கலாம்

* ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்படுகிறது. ஆனால், மருந்து பொருட்கள், மருந்து உபகரணங்கள் கொண்டு செல்ல மற்றும் அத்யாவசிய தேவைகளுக்கான விமான சேவைக்கு அனுமதி

* ராணுவ வீரர்கள் பயணிக்க மற்றும் முக்கிய பயணிகளுக்காக மட்டும் ரயில்கள் இயக்கப்படும்


.* மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம். வேலை செய்யும் இடங்களிலும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்


.* தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில்நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

*பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது

.*ஊரக பகுதிகளுக்கு தொழில் நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம்

*ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செயல்படலாம். அத்யாவசிய பொருட்கள் செயல்படலாம்.

 *கொரியர் நிறுவனங்கள், கேபிள், டிடிஎச் சேவைகள் இயங்கலாம்

1 comment: