கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டவாரியாக எந்தெந்த மருத்துவமனைகளில் சேரலாம்: தமிழக அரசு அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 7, 2020

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டவாரியாக எந்தெந்த மருத்துவமனைகளில் சேரலாம்: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 21 சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


மேலும் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கொரோனா பாதித்தால் எந்த மாவட்ட மருத்துவமனையில் சேரலாம் என்பதையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:சென்னை மாவட்டத்தில் உள்ள ஓமந்தூரார் அரசினர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துக்கல்லூரி மருத்துவமனை,


கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.


அதே போன்று வேலூரில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களையும்,


 சேலத்தில் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சேலம் மாவட்டத்தையும், பெருந்துரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஈரோடு மாவட்டத்தையும்,கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தையும், விழுப்புரம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களையும்,

 திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவண்ணாமலை மாவட்டத்தையும், தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களையும்,


 கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களையும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துக்கல்லூரி கடலூர் மாவட்டத்தையும்,


 திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை அரியலூர், பெரம்பலூர், திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களையும், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி தஞ்சாவூர் மாவட்டத்தையும், திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனை திருவாரூர், நாகை மாவட்டங்களையும்,


 சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனை சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களையும், மதுரை மருத்துவகல்லூரி மருத்துவமனை மதுரை, விருதுநகர் மாவட்டங்களையும்,


தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தேனி மாவட்டத்தையும், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களையும், கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கன்னியாகுமரி மாவட்டத்தையும் ஒருங்கிணைக்கிறது


.மாநிலம் முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை கொண்ட மருத்துவமனைகளாக இந்த மருத்துவமனைகள் மாற்றப்பட்டுள்ளது


. இந்த மருத்துவமனையில் கொரோனா பாசிட்டிவ் இருந்தால் எந்தவிதமான தாமதமும் செய்யாமல் இந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment