முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொலைபேசி எண்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 3, 2020

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொலைபேசி எண்கள்

கரோனா கால ஊரடங்குச் சூழலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக கட்டணம் இல்லா உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


எனவே, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவைகளுக்கு 18004250111 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், கேட்கும் மற்றும் பேசும் திறன் அற்றவர்களுக்கு காணொலி மூலம் சைகை மொழியில் தங்களது தேவைகளைத் தெரிவிக்க 9700799993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்விரு எண்களும் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும்.


மேலும், கரோனா நோய்த் தொற்று குறித்த ஆலோசனைகளை முதியவர்களுக்கு அளிப்பதற்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலோசனை மையம் செயல்படும்.

இந்த ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ள 044-28590804 மற்றும் 044-28599188 ஆகிய இரு எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment