ஊரடங்கு உத்தரவால் இந்திய பொருளாதாரத்தில் இழப்பு இத்தனை கோடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 13, 2020

ஊரடங்கு உத்தரவால் இந்திய பொருளாதாரத்தில் இழப்பு இத்தனை கோடி

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு பிறப்பித்த, 21 நாள் ஊரடங்கு உத்தரவால், இந்திய பொருளாதாரத்தில், 7.50 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.




சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா, உலகம் முழுக்க பரவி, இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, கடந்த, மார்ச், 24 நள்ளிரவில் இருந்து, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலானது. கடந்த, 21 நாட்கள் அமலில் இருந்த ஊரடங்கால், தொழிற்சாலைகள், கடைகள், வணிகவளாகங்கள், பொழுது போக்கு கூடங்கள் மூடப்பட்டன. ரயில், விமானம், பஸ் போக்குவரத்து முடங்கின.



வேளாண், மருத்துவம், சுரங்கம், நிதிச்சேவையின் சில பிரிவுகள் செயல்பட்டன. மொத்தத்தில், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில், 70 சதவீதம் அடியோடு முடங்கியது. இதனால் ஏற்பட்டு உள்ள இழப்பு குறித்து, அக்யூட் ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.



அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரடங்கால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தினமும், 35 ஆயிரம் கோடி ரூபாய் வீதம், 21 நாட்களுக்கு, 7.50 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டல், ரியல் எஸ்டேட், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன



. இதனால், நடப்பு நிதிஆண்டின், ஏப்., - ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், 5 - 6 சதவீதம் பின்னடைவு ஏற்படும். நிலைமை சரியானால், இரண்டாவது காலாண்டில், சிறிதளவு மிதமான வளர்ச்சி தெரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



நாட்டில், சில்லரை விற்பனை துறையில், ஏழு கோடிக்கும் அதிகமான, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வர்த்தகர்கள் உள்ளனர். 45 கோடிக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மாதம், சராசரியாக, 5.25 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது



. ஊரடங்கால், 2.25 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்து. இந்திய சில்லரை வர்த்தகர்கள் கூட்டமைப்பு ஊரடங்கால், தினமும் ஒரு சரக்கு லாரி போக்குவரத்தில், 2,200 ரூபாய் வீதம், 15 நாட்களில், 35 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளோம்.

-நவீன் குப்தா, பொதுச் செயலர், இந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பு.


நாடு முடங்கியுள்ளதால், ரியல் எஸ்டேட் துறைக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


-நிரஞ்சன் ஹிர்நந்தானி, தலைவர், தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில்

No comments:

Post a Comment