இந்தியாவில் இனி பெரிய அளவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்காது - Minnal Kalvi Seithi

Breaking

Monday, April 13, 2020

இந்தியாவில் இனி பெரிய அளவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்காது

கொரோனா பாதிப்பை குறைக்கும் நடவடிக்கையில் நாடு உள்ளதால், இங்கு நாள் தோறும் அறிவிக்கப்படும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்காது’’ என விஞ்ஞானியும், நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே.சரஸ்வத் கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சரின் முன்னாள் அறிவியல் ஆலோசகராக இருந்தவர் வி.கே.சரஸ்வத். பிரபல விஞ்ஞானியான இவர் தற்போது நிதிஆயோக் உறுப்பினராக உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:


கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் அதிகளவிலான பரிசோதனை. இது நல்ல அறிகுறி. கொரோனா அறிகுறிகளுடன் மறைந்து இருந்தவர்கள் எல்லாம் தற்போது வெளியே வருகின்றனர்.


கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது. தற்போது ஒவ்வொரு நாளும் 700 முதல் 800 பேர் வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை இதை தாண்டி செல்லாது. ஏனென்றால், கொரோன பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நாம் மேற்கொள்கிறோம். மத்திய அரசு அறிவித்த நாடு தழுவிய முடக்கம், நல்ல பலனை அளித்து வருகிறது.


இந்தியா கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாகவே, சிக்கன் குன்யா, டெங்கு போன்ற பல வைரஸ் தாக்குதல்களை தொடர்ச்சியாக பார்த்துள்ளது. இது போன்ற நோய்களுக்கு முன் கூட்டியே தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனையில் நாம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment