வறுமையிலும் நிதி வழங்கிய வாலிபர் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, April 13, 2020

வறுமையிலும் நிதி வழங்கிய வாலிபர்

அரசு உதவிகள் எதுவும் பெற முடியாத சூழலிலும், இருளர் குடும்பத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி, கொரோனா தடுப்பு பணிக்காக, 500 ரூபாய் வழங்கியுள்ளார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி, கீழ்பாதியில் உள்ள இருளர் குடியிருப்பை சேர்ந்தவர், கூலித்தொழிலாளி ரமேஷ், 32. இவர், கொரோனா தடுப்புக்காக, முதல்வரின் நிவாரண நிதிக்கு, 500 ரூபாய் வழங்கி, வறுமையிலும் தயாள குணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


கீழ்பாதி கிராமத்தில், ஒதுக்குப்புறமான பகுதியில், எட்டு இருளர் குடும்பத்தினர் குடிசைகளில் வசிக்கின்றனர். ஊரடங்கு நிவாரணமாக அரசு அறிவித்துள்ள, 1,000 ரூபாய், இலவச மளிகை பொருட்கள் என, எதையும் பெற முடியாமல், இவர்கள் தவிக்கின்றனர்.


காரணம், இவர்கள் ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஜாதிச்சான்று என, அரசின் எந்தவித ஆதாரத்தையும் பெறாமல் உள்ளனர். திண்டிவனம் சப் - கலெக்டர் உள்ளிட்ட பலரிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த சான்றும் கிடைக்கவில்லை.

ரமேஷ் கூறியதாவது: கொரோனா நோயின் ஆபத்து குறித்து, எங்கள் பகுதி மக்கள் மூலம் அறிந்தேன். மக்கள் நன்றாக இருந்தால் தான், நாங்கள் வாழ முடியும்.கூலி வேலை செய்து, சேர்த்து வைத்த பணத்துடன், திண்டிவனத்திலுள்ள பழங்குடி இருளர் சமூகத்திற்கான ஆலோசகர் ராஜேஷ் மூலம், 500 ரூபாயை, முதல்வரின் நிவாரண உதவிக்கு அனுப்பி வைத்தேன். எங்களுக்கு சான்றிதழ்கள் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

ரமேஷை பாராட்ட, அவரது மைத்துனரான அய்யப்பனின் மொபைல் எண்: 78249 15954

No comments:

Post a Comment