ஊரடங்கில் பிராமி எழுத்துக்கள் பயிலும் மாணவர்கள்: தமிழின் தொன்மையை மீட்க முயற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 25, 2020

ஊரடங்கில் பிராமி எழுத்துக்கள் பயிலும் மாணவர்கள்: தமிழின் தொன்மையை மீட்க முயற்சி

கொரோனா விடுமுறையில், திருப்புல்லாணி அரசு பள்ளி மாணவர்கள், தமிழின் துவக்க கால எழுத்துக்களை பயின்று, தமிழின் தொன்மையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கமான விடுமுறையை போல் அல்லாமல், வீட்டிற்குள் முடக்கும் விடுமுறையாகி இருக்கிறது, கொரோனா ஊரடங்கு. இந்த காலகட்டத்தில், பெரும்பாலான பள்ளி, கல்லுாரிகள், 'ஆன்-லைன்' கல்வியை துவக்கி இருக்கின்றன




. கள ஆய்வுபாடநுால் தவிர, பல நுால்களையும், விஷயங்களையும், மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில், 'வாட்ஸ் ஆப்' குழுவை துவக்கி, மாணவர்களுக்கு தொன்மை கல்வியை அளித்து வருகிறார், ஆசிரியர் ராஜகுரு.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலை பள்ளியில் இயங்கி வரும், தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் செயலாளராகவும் உள்ள இவர், ஒரு வரலாற்று ஆய்வாளர்.இதுகுறித்து, ஆசிரியர் ராஜகுரு கூறியதாவது:

கடந்த, 2010 முதல், எங்கள் பள்ளியில், தொன்மை பாதுகாப்பு மன்றத்தை நடத்தி வருகிறேன். இதன் வழியாக, மாணவர்களுக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த வரலாற்று செய்திகளை விளக்குவதோடு, அவர்களுக்கு கள ஆய்வு செய்யவும் பழக்கி இருக்கிறேன்.

ஆர்வம்

பல மாணவர்கள், கல்வெட்டு படியெடுப்பது, படிப்பது உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கோவில் கட்டடக்கலை சார்ந்த வகுப்புகளை, கோவில்களுக்கே அழைத்துச் சென்று நடத்துகிறோம். ஏற்கனவே, மாணவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 'தேடித் திரிவோம் வா' என்ற, நுாலாக வெளிவந்துள்ளது




.இந்த விடுமுறையில், மாணவர்களை, கள ஆய்வுக்கு அழைத்துச் செல்ல இயலவில்லை. அதனால், 'வாட்ஸ் ஆப்' குழுவை துவக்கி, பிராமி எழுத்துப் பயிற்சியை அளித்து வருகிறேன். மாணவர்களும் ஆர்வமாக கற்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

கொரோனா விடுமுறையை மாற்றி சிந்திக்கும் இவர்களை பின்பற்றினால், 'ஆன்லைன்' கல்வியிலும், மாணவர்களுக்கு ஆர்வம் வரும். அத்துடன், பாடநுால்களைத் தாண்டி, பல்துறை அறிவு பெறவும் வாய்ப்பாக அமையும்.'பிராமி கல்வெட்டை படிக்க முடியும்!

'எட்டாம் வகுப்பு மாணவி, பிரவீனா: எங்களுக்கு, 'தொல்தமிழ் எழுத்துகள்' என்ற நுாலை, ஆசிரியர் வழங்கினார். அதை வைத்து, தமிழ் - பிராமி எழுத்துக்களை எழுதிப் பழகினோம். 


வீட்டில் உள்ளோரின் பெயர், மனப்பாட செய்யுள், திருக்குறள் உள்ளிட்டவற்றை பிராமி எழுத்தில் எழுதி, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்புவோம். ஆசிரியர், திருத்தங்களை சொல்வார். நன்றாக எழுதினால் பாராட்டுவார். இனி, என்னால், தமிழ் - பிராமி கல்வெட்டுகளை படிக்க இயலும்.

'விடுமுறையில் பயனுள்ள பயிற்சி!

'எட்டாம் வகுப்பு மாணவர், மனோஜ்: நாட்டின் பிரதமர்கள், தமிழக முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை, தமிழ் - பிராமி எழுத்தில் எழுதி, குழுவில் பதிவிட்டுள்ளேன்




. நம் முன்னோர்கள் பயன்படுத்திய எழுத்துக்களை கற்கவும், நம் எழுத்தின் வளர்ச்சியை அறியவும், இப்பயிற்சி உதவுகிறது.விடுமுறையை பயனுள்ள வழியில், கழிக்கிறோம். எங்களுடன், எட்டாம் வகுப்பு மாணவி, டோனிகாவும், பிராமி எழுத்து கற்கிறார். எங்கள் பள்ளியில் பயின்று, தற்போது பட்டப்படிப்பு படிக்கும் சிவரஞ்சனி அக்கா, தற்போது, வட்டெழுத்து பயில்கிறார்.


No comments:

Post a Comment