இந்த திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடை: தமிழக அரசு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 25, 2020

இந்த திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடை: தமிழக அரசு உத்தரவு

தேசிய ஊரக வேலை திட்டத்தில், 55 வயதிற்கு மேற்பட்டவர்களை, பணியமர்த்தக் கூடாது' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி இயக்குனர், பழனிசாமி எழுதியுள்ள கடிதம்:தமிழக அரசு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை, நோய் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் துவக்க, அனுமதி அளித்துள்ளது.




எனவே, பணி செய்யும் இடங்களில், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:ஊரகப் பகுதிகளில், நோய் கட்டுப்பாடு பகுதிகள் மற்றும் சிவப்பு வட்டாரங்கள் தவிர்த்து, பிற பகுதிகளில், நீர்ப் பாசனம் மற்றும் நீர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தொழிலாளர்களுக்கு முகக் கவசங்கள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். பணி நடக்கும் இடங்களில், சோப்பு, தண்ணீர் ஆகியவற்றுடன், கை கழுவும் வசதிகள் ஏற்படுத்த பட வேண்டும். வேலையில், 55 வயதிற்கு மேற்பட்டவர்களை ஈடுபடுத்தக் கூடாது





.சிறுநீரகம், இதய நோய், புற்று நோய் போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், பிற தீவிர உடல் உபாதைகள் உள்ளோர், கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். சளி, இருமல், தும்மல், சுவாசப் பிரச்னை, லேசான காய்ச்சல் இருந்தாலும், அவர்களை வேலைக்கு அனுமதிக்கக் கூடாது.

பணியிடத்தில், புகைபிடித்தல், பாக்கு மெல்லுதல், புகையிலை பொருட்களை உபயோகித்தல் போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது. தொழிலாளர்களை மொத்தமாக, வாகனங்களில் அழைத்து செல்லக் கூடாது.சிறிய குழுக்களாக, தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். 




நடமாடும் மருத்துவ குழுக்களின் சேவைகளை பயன்படுத்தி, தொழிலாளர்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பதையும், தேவை அடிப்படையில், பிற சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.மொபைல் போன்களை, பணியிடத்திற்கு எடுத்து வர வேண்டாம் என, தொழிலாளர்களை அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment