பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்ய வேண்டும்: முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வி அமைச்சருக்கு கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 25, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்ய வேண்டும்: முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வி அமைச்சருக்கு கோரிக்கை

பத்தாம் வகுப்பு பொது தேர்வை, இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.




தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச், 27ல் துவங்குவதாக இருந்த, 10ம் வகுப்பு பொது தேர்வு, தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில், முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:


'பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மேல்நிலை படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். எனவே, இந்த தேர்வு அவசியம்' என, அரசு அறிவித்துள்ளது.ஆனால், தொற்று பயம் காரணமாக, படிப்பு சூழலில் இருந்து, மாணவர்கள் விலகியுள்ளனர்.



 குறைந்த பட்சம், ஒரு மாதமாவது, வகுப்புகள் நடத்திய பின்னரே, தேர்வு நடத்த முடியும்.எனவே, முந்தைய அனுபவங்கள் அடிப்படையில், தற்போதும் முடிவு எடுக்கலாம்.

2008ல், வேலுார் மாவட்டத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள்கள் தீயில் எரிந்த சம்பவத்தில், சராசரி மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர்.அதேபோல், 2013ல், விழுப்புரம் மாவட்டத்தில், விடைத்தாள்கள் மாயமான விவகாரத்திலும், அனைவருக்கும் தேர்ச்சி என, முடிவு எடுக்கப்பட்டது. 



அதுபோன்ற முடிவை, தற்போதும் அரசு எடுக்க வேண்டும்.மேலும், பள்ளி கல்வி துறை நடத்திய, முந்தைய பருவ தேர்வுகள், வகுப்பு தேர்வுகளின் அடிப்படையில், தேர்ச்சி வழங்கலாம்.


 இதன் வாயிலாக, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதுடன், மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள், தொழிற்கல்விகளில் சேரும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

1 comment: