கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 3, 2020

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், போன் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்,




 அரசு பள்ளி ஆசிரியர்கள்.கோவை மாவட்டம், சூலுார் தாலுகாவில் உள்ள வடுகன்காளிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது



.ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், வடுகன்காளிபாளையம் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோரை, போன் மூலம் தொடர்பு கொண்டு, கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது, அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது




.பள்ளி தலைமையாசிரியர் சிங்காரவேல் கூறுகையில், "ஊரடங்கு அமலுக்கு வந்ததில் இருந்து, ஒரு நாள் விட்டு ஒருநாள், மாணவ, மாணவியரின் பெற்றோரை, ஆசிரியர்கள் மொபைல்போன் மூலம் தொடர்பு கொள்வர். குழந்தைகளை கடைக்கு அனுப்பவோ, வெளியில் விளையாடவோ அனுமதிக்க வேண்டாம். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது அவர்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது," என்றார்.

No comments:

Post a Comment