அருகிலிருப்பவர்களுக்கு கொரோனா உள்ளதா? - கண்டறிந்து சொல்லும் அரசின் ஆரோக்கிய சேது ஆப்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 3, 2020

அருகிலிருப்பவர்களுக்கு கொரோனா உள்ளதா? - கண்டறிந்து சொல்லும் அரசின் ஆரோக்கிய சேது ஆப்!

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனாவிடமிருந்து தற்காத்து கொள்ளும் வசதிகளை மத்திய அரசு, மக்களுக்கு வழங்கி வருகிறது. முன்னதாக எனது அரசு (MyGov) என்ற ஆப் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு தகவல்களை வழங்கி வந்தது.



தற்போது கொரோனா வைரஸை டிராக் செய்யும் வகையிலான பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது.ஆரோக்கிய சேது என்ற அந்த செயலியை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மொபைலில் உள்ள இருப்பிடம் காட்டும் வசதி மற்றும் ப்ளூடூத்தை இயக்கிவிட்டு, இச்செயலியை திறந்தால், நாம் இருக்கும் பகுதியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் உள்ளார்களா என காட்டும்.


மேலும் நாம் கொரோனா தொற்று உள்ளவரிடமிருந்து 6 அடி தூரத்திற்குள் இருந்தால், 'அதிக ஆபத்து' என எச்சரிக்கும். உடனடியாக பரிசோதனை மையத்தையோ அல்லது 1075 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பரிசோதனை உதவியையோ பெற வேண்டும் என வலியுறுத்தும்.கூடுதலாக, ஆரோக்ய சேது ஆப், கொரோனா வைரஸ் ஆபத்திலிருந்து விலகியிருப்பது எப்படி என்ற குறிப்புகளையும் பரிந்துரைக்கிறது.



நமக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டால் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டிருந்தால் கூட இந்த ஆப், நம் தரவுகளை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும். இருப்பினும், நமது தகவல்களை மூன்றாம் நபர்களால் பார்க்க முடியாது என இதன் தனியுரிமை கொள்கை உறுதி அளிக்கிறது.ஆன்ட்ராய்டு போன் மற்றும் ஐபோன் பயனர்களுக்கும் இந்த ஆப் கிடைக்கும்.

No comments:

Post a Comment