பெண்களுக்கு வங்கி கணக்குகளில் ரூ.500 டெபாசிட் செய்யப்படும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 3, 2020

பெண்களுக்கு வங்கி கணக்குகளில் ரூ.500 டெபாசிட் செய்யப்படும்

பெண்கள் 'ஜன்தன்' வங்கி கணக்குகளில், முதல் தவணை பணம் ரூ.500 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அப்பணத்தை ஏப்.,9ம் தேதிக்கு பிறகு பயணாளிகள் எடுத்துக் கொள்ளலாம்.கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் மத்திய பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவால், ஏழைகள் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, 20 கோடி பெண்களுக்கு, ஜன்தன் வங்கி கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஜன்தன் வங்கி கணக்கு உள்ள பெண்களுக்கு முதல் தவணை, ஏப்.,3) முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சமூக விலகலை கடைபிடிக்கும் நோக்கில், 0 மற்றும் 1 என முடியும் வங்கி கணக்கு உள்ள பெண்களுக்கு (APRIL 3) தவணை பணம் செலுத்தப்பட உள்ளது. 2 மற்றும் 3 என முடியும் வங்கி கணக்குகளுக்கு ஏப்.,4ம் தேதியும், 4 மற்றும் 5 என முடியும் வங்கி கணக்குகளுக்கு ஏப்., 7ம் தேதியும் பணம் செலுத்தப்படும்

.6 மற்றும் 7 என முடியும் வங்கி கணக்குகளுக்கு ஏப்.,8ம் தேதியும், 8 மற்றும் 9 என முடியும் வங்கி கணக்குகளுக்கு ஏப்.,9ம் தேதியும் பணம் செலுத்தப்படும். 9ம் தேதிக்கு பிறகு, பயணாளிகள் தாங்கள் விருப்பப்பட்ட நாளில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

.அவசரம் வேண்டாமே...

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வங்கி சங்கம், 'வங்கி கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்படுவதால், பணத்தை எடுக்க பயனாளிகள் அவசரப்பட தேவை இல்லை. எப்போது வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். முடிந்தவரை ஏடிஎம்.,களில் எடுப்பது சிறந்தது' எனத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment