வங்கி கணக்குகளில் ரூ.1000 ஏன் செலுத்தப்படவில்லை? : தமிழக அரசு விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 3, 2020

வங்கி கணக்குகளில் ரூ.1000 ஏன் செலுத்தப்படவில்லை? : தமிழக அரசு விளக்கம்

கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக வழங்கப்படும் ரூ. 1000 வங்கி கணக்குகளில் ஏன் செலுத்தப்படவில்லை என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

முதலமைச்சர் வழங்கும் ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது

. வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கில் கொரோனா பரவாமல் தடுக்க ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

APRIL 2 முதல் ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் விநியோகம் அனைத்து மாவட்டத்திலும் தொடங்கியுள்ளது

இதனால் மக்கள் ரேஷன் கடைகளில் குவிந்து வருகின்றனர் பல்வேறு இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக இருப்பதை காண முடிகிறது. இதில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவ இருக்க வாய்ப்புள்ளது.

எனவே இதனை தவிர்க்க ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று நிவாரண நிதி மற்றும் இலவச அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என அவர் மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, ரேஷன் அட்டைகளுடன் வங்கிக் கணக்குகள் இணைக்கப்படவில்லை. தற்பொழுது அதற்கான கால அவகாசம் இல்லை என்பதால் ரேஷன் கடைகளில் ரூ.1000 தரப்படுகிறது.

கணக்கு எடுப்பதற்கு ஒரு மாத காலம் ஆகும் என்பதால் கணக்கெடுப்பை தற்போது செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது

No comments:

Post a Comment