கரோனா: ரேபிட் டெஸ்ட் கிட் பற்றி நீங்கள் அவசியமாக தெரிந்துகொள்ளவேண்டியவை - Minnal Kalvi Seithi

Breaking

Monday, April 13, 2020

கரோனா: ரேபிட் டெஸ்ட் கிட் பற்றி நீங்கள் அவசியமாக தெரிந்துகொள்ளவேண்டியவை

கரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் ரேபிட் கிட் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்திலும் இந்த முறை கையில் எடுக்கப்பட்டுள்ளது.

 இதன்மூலம் கரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதை துள்ளியமாகவும் விரைவாகவும் கண்டறியமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.


ரேபிட் கிட் என்றால் என்ன?

கரோனா வைரஸ் தொற்றை கண்டறிய பயன்படுத்தப்படும் சிறிய கருவிக்கு பெயர் ரேபிட் கிட். இந்த பரிசோதனையின் உண்மையான பெயர் இம்யூனோகுரோமோட்டோகிராபி.

இந்த முறையில் பரிசோதனை செய்வதற்கு சிறு துளி ரத்தம் மட்டும் போதும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

எப்படி வேலை செய்கிறது ரேபிட் கிட்?

இந்த ரேபிட் கிட்-ல் ஏற்கனவே கரோனா வைரஸின் ஆண்டிஜன் வைக்கப்பட்டிருக்கும். அந்த கருவியில் ஒருவருடைய ரத்தம் மற்றும் பப்பர் எனப்படும் ரசாயனத்தை இடும்போது, கரோனா தொற்று அவருக்கு ஏற்பட்டிருக்கிறதா இல்லையா என்பதனை நிறம் மாறுதலை வைத்து கண்டரியலாம்.

 மேலும், கரோனா தொற்று உறுதியாகி இருந்தால், எவ்வளவு நாட்களுக்கு முன் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதையும் இந்த ரேபிட் பரிசோதனை கிட்டின் மூலம் கண்டறியமுடியும்.

ரேபிட் கிட்-ஐ வைத்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால், 30 நிமிடங்களுக்குள்ளாகவே முடிவு தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.


தற்போது நடைமுறையில் உள்ள பரிசோதனைக்கும் ரேபிட் கிட்டிற்கும் என்ன வித்தியாசம்?

தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஆர்.டி.பி.சி.ஆர் முறையில், தொண்டைச்சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை தனியாக பிரித்தெடுத்து பின்னர் வைரஸ் கிருமிகளை மட்டும் மற்றொரு கருவியில் வைத்து பரிசோதனை செய்து கரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆனால், ரேபிட் கருவியில் அதுபோன்று இல்லை.


எவ்வளவு செலவாகும்?

தற்போது நடைமுறையில் உள்ள முறையில் சோதனை செய்துபார்த்தால் 3000 ரூபாய் முதல் 4500 ரூபாய் வரை செலவாகும். ஆனால், ரேபிட் கருவி மூலம் பரிசோதனை செய்தால் ரூ.200 மட்டுமே செலவாகும்.

No comments:

Post a Comment