விமான சேவையும் ரயில் சேவையும் இந்த தேதி வரை ரத்து - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, April 14, 2020

விமான சேவையும் ரயில் சேவையும் இந்த தேதி வரை ரத்து

நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, பயணிகள் விமான சேவை மே 3 வரை ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.


இந்நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவை ரத்தும் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, ரயில் சேவை ரத்தும் மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்கிழமை) காலை அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரீமியம் ரயில்கள், விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள், கொல்கத்தா மெட்ரோ ரயில் உள்ளிட்ட இந்திய ரயில்வேயின் அனைத்துப் பயணிகள் ரயில் சேவையும் மே 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.


ஊரடங்கு நீட்டிப்பால் சென்னை மெட்ரோ ரயில் சேவையும் மே 3-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment