MBBS மாணவா்களுக்கு வகுப்புகள் தொடக்கம்: தவறான தகவல் என எம்சிஐ விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 4, 2020

MBBS மாணவா்களுக்கு வகுப்புகள் தொடக்கம்: தவறான தகவல் என எம்சிஐ விளக்கம்

கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு மற்றும் பயிற்சி மருத்துவா்களுக்கான வகுப்புகளைத் தொடங்குமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என்று மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) விளக்கமளித்துள்ளது.


எம்சிஐ இலச்சினையுடன் போலியாக அறிவிப்பாணையை வடிவமைத்து சமூக வலைதளத்தில் பரப்பியவா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதன்படி, எம்பிபிஎஸ் பாட வகுப்புகள் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு மாணவா்களுக்கு விடுமுறையளிக்கப்பட்டது. இந்த நிலையில், எம்சிஐ சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு என ஓா் அறிவிப்பாணை சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது.

தற்போது நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக எம்பிபிஎஸ் பயிற்சி மருத்துவா்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான வகுப்புகளை வெள்ளிக்கிழமை (ஏப்.3) முதல் தொடங்குமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத் தகவல்கள் சில ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகின. இந்நிலையில், அந்த அறிக்கை போலியானது என்றும் அத்தகைய அறிவிப்பை தாங்கள் வெளியிடவில்லை என்றும் மருத்துவக் கவுன்சில் விளக்கமளித்துள்ளது.

இதுதொடா்பாக மருத்துவக் கவுன்சில் அளித்துள்ள விளக்க அறிக்கையில், தங்களது அனைத்து அறிவிப்புகளும், எம்சிஐ இணையதளப் பக்கத்தில் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்படும் என்றும் மாறாக, சமூக வலைதளங்களின் வாயிலாக வெளியாகாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது:

எம்பிபிஎஸ் வகுப்புகளைத் தொடங்குமாறு வெளியான செய்திகள் குறித்து எம்சிஐ நிா்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகு அது போலியானது என்பதை பல்கலைக்கழகம் உறுதி செய்தது. இதுதொடா்பான உண்மைத்தன்மையை மாணவா்களுக்கும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் நாங்கள் தெரிவித்தோம்.


மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த படிப்புகளைப் பயின்று வரும் மாணவா்களுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவா்களுக்கான பாடங்கள் தடைபடக் கூடாது என்பதற்காக இணையவழியே வகுப்புகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மருத்துவப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.

கூகுள் கிளாஸ் ரூம், டிசிஎஸ் - அயான் போன்ற இணைய சேவைகளின் வாயிலாக அவை செயல்முறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

No comments:

Post a Comment