இந்த ஆண்டில் வேலை செய்தவர்களுக்கு ரூ.1,20,000 தருகிறதா அரசு? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 18, 2020

இந்த ஆண்டில் வேலை செய்தவர்களுக்கு ரூ.1,20,000 தருகிறதா அரசு?

1990 முதல் 2020 வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு மத்திய அரசு ரூ.1,20,000 அளிப்பதாக தவறான தகவல் பரவி வருகிறது.

1990 முதல் 2020 வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ரூ.1,20,000 அளிப்பதாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவி வருகிறது. இந்தப் பணத்தை பெறவிருக்கும் ஊழியர்களின் பெயரையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.


மேலும் இந்தப் பணத்தை பெறும் ஊழியர்களின் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து பாருங்கள் என்று ஒரு லிங்க் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.

இந்நிலையில் 1990 முதல் 2020 வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு மத்திய அரசு ரூ.1,20,000 தருகிறது என்ற செய்தி போலியானது என்றும், அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் இதுபோன்ற செய்திகளில் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் நீங்கள் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment