அதிக நேரம் மாஸ்க் பயன்படுத்துவது உடல்நலன் பாதிப்பு மற்றும் சோர்வை ஏற்படுத்துமா? - மருத்துவர்கள் கூறுவது என்ன? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 18, 2020

அதிக நேரம் மாஸ்க் பயன்படுத்துவது உடல்நலன் பாதிப்பு மற்றும் சோர்வை ஏற்படுத்துமா? - மருத்துவர்கள் கூறுவது என்ன?

அதிக நேரம் மாஸ்க்கை பயன்படுத்துவதால் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை சுவாசிக்க முடிவதில்லை என சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது, அதற்கு மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

அதிக நேரம் மாஸ்க் அணிவது உடல்நலனில் பாதிப்பையும் சோர்வையும் ஏற்படுத்தும் என சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.



 இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகள், பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மாஸ்க் அணிவதன் மூலம் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தற்காத்துக்கொள்ள முடியும் எனவும் நம்பப்படுகிறது.

இந்த நிலையில், அதிக நேரம் மாஸ்க் அணிந்திருந்தால் உடஇல் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அதனால் உடல்சோர்வு மற்றும் பலவிதமான உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் சமூகவலைதளங்களில் பலவிதமான தகவல்கள் பகிரப்பட்டது. 



மேலும், மாஸ்க் அணிவதால் நாம் வெளியேவிட்ட கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை மீண்டும் மீண்டும் சுவாசிப்பதால் இவ்வாறு ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.


ஆனால், தற்போது அந்த தகவலில் உண்மையில்லை என்று நிரூபனமாகியுள்ளது. வைரலாகும் போஸ்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது போல மாஸ்க் அணிவதால் எந்த உடல் உபாதைகளும் ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


 N- 95 மாஸ்குகள் பயன்படுத்தினால் மட்டும் 5%ல் இருந்து 20% குறைவான ஆக்ஸிஜன் கிடைக்கும் எனவும் அப்படி குறைவான ஆக்ஸிஜன் வந்தாலும் அதன் மூலம் சோர்வு போன்றவை ஏற்படாது என மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்



மேலும், இதுபோன்ற பதிவுகளால் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் போகக்கூடும் எனவும் இதுபோன்ற பதிவுகளை உண்மையை அறியாமல் பகிரவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


ஆனால், மாஸ்கை மிகவும் அழுத்தமாக கட்டக்கூடாது எனவும் நமக்கு வசதியாக இருக்கும்படி பயன்படுத்துவது சிறந்தது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment