152 ஆண்டுகளாக செயல்படும் வடலூர் அணையா அடுப்பு திட்டம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, May 23, 2020

152 ஆண்டுகளாக செயல்படும் வடலூர் அணையா அடுப்பு திட்டம்

150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் வடலூர் சத்திய தரும சாலையில் ஆன்மீகவாதி வள்ளலார் தொடங்கிய அணையா அடுப்பு திட்டத்தின் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் உணவருந்தி வருகின்றனர். இந்த திட்டம் கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் பயனுடையதாக இருப்பது இன்னும் சிறப்பு பெறுகிறது.கடலுார் மாவட்டம் வடலூரில் உள்ள தரும சாலைக்கு வரும் நபர்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கும் எனக்கூறி 1867ல் மார்ச் 23ம் தேதி வள்ளலார் ஏற்றிய அடுப்பு, தொடர்ந்து செயல்படுகிறது.


தினமும் 600 பேர் உணவருந்தி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டதால், பலரும் சத்திய தரும சாலையில் தங்கியுள்ளனர் என தருமசாலை நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இது  குறித்து தருமசாலை நிர்வாக அதிகாரி சரவணன் கூறியதாவது: ''அன்னதானம் பல கோயில்களில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வள்ளலார் தொடங்கிய இந்த தரும சாலையில், தினமும் உணவு வழங்கப்படுகிறது.


 பசியோடு வருபவர்களுக்கு உணவு வழங்கவேண்டும் என்பது வள்ளலாரின் முக்கிய நோக்கம் என்பதால் தொடர்ந்து செயல்படுகிறோம். சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறோம். இங்குள்ளவர்களை முகக்கவசம் அணியச்சொல்கிறோம். இங்கு தங்கி சாப்பிடும் நபர்களுக்கு புதிதாக தட்டு வழங்கியுள்ளோம்,'' இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment