உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, May 23, 2020

உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை

உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா (22) பெற்றுள்ளார்.

2018 ம் ஆண்டு நடந்த அமெரிக்க டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸை தோற்கடித்ததன் மூலம் இவர் பிரபலமடைந்தார். இவர் கடந்த ஆண்டில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ 284 கோடி சம்பாதித்துள்ளார். 1990ம் ஆண்டு முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது. அதன்படி எந்த ஒரு விளையாட்டு வீராங்கனையும் ஒரே ஆண்டில் ரூ 284 கோடி சம்பாதித்ததில்லை. இதன் மூலம் இவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

2015ம் ஆண்டு ரூ 225 கோடி வருமானம் பெற்ற தடகள வீராங்கனை மரியா ஷரபோவாவின் சாதனையை இதன் மூலம் இவர் முறியடித்துள்ளார். நைக் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் விளையாட்டு வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளதாக ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment