பள்ளி மாணவர்களுக்கான 2-வது அபாகஸ் முகாம் ஆன்லைனில் மே 23-ம் தேதி தொடக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, May 20, 2020

பள்ளி மாணவர்களுக்கான 2-வது அபாகஸ் முகாம் ஆன்லைனில் மே 23-ம் தேதி தொடக்கம்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘எஸ்ஐபி அபாகஸ்’ (SIP abacus) சார்பில் பள்ளி மாணவர்களுக் கான 2-வது ஆன்லைன் அபாகஸ் முகாம் வரும் 23-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்க உள்ளது.


கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பள்ளி மாணவர் களுக்காக வானியல் முகாம், அபாகஸ் முகாம், விவசாய முகாம் (Little Farmer), உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உரையாடல் (Webinar) என பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைனில் முன்னெடுத்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே இணையம் வழியாக பங்கேற்க முடிவதால், ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் இவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்று வரு கின்றனர்.

அந்த வகையில், ‘எஸ்ஐபி அபாகஸ்’ நிறுவனத்துடன் இணைந்து பள்ளி மாணவர் களுக்கான அபாகஸ் முகாம் கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடத்தப்பட்டது. கவனிக்கும் திறன், கணிதத் திறன், படித்ததை நினைவூட்டு தல், தன்னம்பிக்கை, பார்த்ததை நினைவில் வைத்தல் ஆகிய திறன்களை அதிகரித்துக் கொள் வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இது மாணவர் களுக்கு உற்சாகமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.


இதற்கிடையில், இந்த முகா மில் பங்கேற்பது குறித்து ஏராள மான மாணவ, மாணவிகள், பெற்றோர் தொடர்ந்து விசாரித் தபடி உள்ளனர். அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, வரும் 23, 24, 25 ஆகிய 3 நாட்களுக்கு 2-வது அபாகஸ் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் முகாம் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.


இதில் பங்கேற்க செல்போன், லேப்டாப் அவசியம் இருக்க வேண்டும். செயலி (APP) மூலம் கற்றுக்கொள்ள செல்போனும், ZOOM APP வழியாக நேரடியாக பங்கேற்க லேப்டாப்பும் இருக்க வேண்டும். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.294/- செலுத்த வேண்டும். https://connect.hindutamil.in/abacus.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment