தேர்வுக்கு முன் வகுப்புகள் நடத்த வேண்டும்...! பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 20, 2020

தேர்வுக்கு முன் வகுப்புகள் நடத்த வேண்டும்...! பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு

மாணவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் வகுப்புகளை நடத்திய பிறகு பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.


கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, பத்தாம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. பிறகு அந்த தேர்வுகள் ஜூன் முதல் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்தும், தேர்வுகளை தள்ளி வைக்கப் கோரியும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் கொங்கடை கிராமம் எனும் மலை கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி மீனாவின் தந்தை மாரசாமி பூசாரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிபாளையத்தில் படித்து வரும் தனது மகள், ஊரடங்கு காரணமாக விடுதியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவசரகதியில் ஊர் திரும்பிய அவர், பாடப்புத்தகங்கள் எதையும் எடுத்து வர வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இதனால் அவரால் தேர்வுக்கு தயாராக இயலவில்லை என்றும் மலை கிராமமான தங்கள் கிராமத்திற்கு தேர்வு நுழைவுச் சீட்டுகள் வந்து சேர்வதும் சிக்கலானது எனவும், தேர்வில் கலந்து கொள்ள போக்குவரத்து வசதிகள் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க கோரி கடலூரில் சேர்ந்த இளங்கீரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் அனிதா சுமந்து அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மாணவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதாராமலிங்கம்,தங்கள் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிட்டார்.


மேலும் அவர், கிராமப்புறங்களிலும், மலை கிராமங்களிலும் வசிக்கும் மாணவர்களுக்கு புத்துணர்வு ஏற்படும் வகையில், வகுப்புகள் நடத்திய பிறகே தேர்வு நடத்த வேண்டும் என முறையிட்டார். இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை பட்டியலிடும்படியும்,பட்டியலில் வந்த பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

அதேபோல, கடலூரைச் சேர்ந்த இளங்கீரன் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment