ரூ 20.97 லட்சம் கோடி: எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு நிதி? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 17, 2020

ரூ 20.97 லட்சம் கோடி: எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு நிதி?

தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20.97 லட்சம் கோடியில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.


பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். இதில் பல்வேறு துறைகள் சார்ந்த 7 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.


மேலும், தற்சார்பு இந்தியா திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.20.97 லட்சம் கோடி என்றும் இது ஐந்து கட்டங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஐந்து கட்டங்களாக தொகை ஒதுக்கீடு விவரம்:

முதல் கட்டம் - ரூ. 5,94,550 கோடி

இரண்டாம் கட்டம் - ரூ. 3,10,000 கோடி

மூன்றாம் கட்டம் - ரூ. 1,50,000 கோடி

நான்காம் & ஐந்தாம் கட்டம் - ரூ. 48,100 கோடி

கரீப் கல்யாண் யோஜனா உள்ளிட்ட முந்தைய திட்டங்கள் - ரூ. 1,92,800 கோடி

ஆர்.பி.ஐ சலுகைகள்- ரூ. 8,01,603 கோடி

மொத்தம் - ரூ. 20,97,053 கோடி

எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு?

முதல் கட்டம் - ரூ. 5,94,550 கோடி

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான அவசர கடன் வசதி - ரூ. 3,00,000 கோடி

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் கடன் - ரூ.20,000 கோடி

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான Fund of Funds - ரூ. 50,000 கோடி


பி.எப். நிறுவனத்துக்கு  - ரூ.2,800 கோடி

பி. எப் வட்டித் தொகை குறைப்பு - ரூ. 6,750 கோடி

நிதித்துறை நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி   - ரூ 30,000 கோடி

என்.பி.எப்.சி மற்றும் எம்.எப்.ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் - ரூ. 45,000 கோடி

மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகங்களுக்கு - ரூ.90,000 கோடி

டி.டி.எஸ் வரிப்பிடித்தம் - ரூ. 50,000 கோடி



இரண்டாம் கட்டம் - ரூ. 3,10,000 கோடி

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்- ரூ. 3,500 கோடி

முத்ரா கடன் திட்ட மானியம் - ரூ. 1,500 கோடி

சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி - ரூ. 5,000 கோடி

CLSS - MIG வீட்டுக்கடன் திட்டம் - ரூ.70,000 கோடி

நபார்டு வங்கி மூலமாக கூடுதல் அவசர நிதி - ரூ.30,000 கோடி

கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்கு கூடுதல் நிதி - ரூ. 2,00,000 கோடி



மூன்றாம் கட்டம் - ரூ. 1,50,000 கோடி

குறு உணவு உற்பத்தி நிலையங்கள் - ரூ. 10,000 கோடி

பிரதான் மந்திரி மத்யச சம்பத யோஜனா - ரூ. 20,000 கோடி

ஆபரேஷன் க்ரீன் திட்டம் - ரூ. 500 கோடி

விவசாய உள்கட்டமைப்பு நிதி - ரூ. 1,00,000 கோடி


கால்நடை வளர்ப்புத் துறை உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு - ரூ. 15,000 கோடி

மூலிகை உற்பத்தி - ரூ. 4,000 கோடி

தேனீ வளர்ப்பு - ரூ. 500 கோடி



நான்காம் & ஐந்தாம் கட்டம் - ரூ. 48,100 கோடி

நம்பகத்தன்மை இடைவெளி நிதி (வி.ஜி.எப்) - ரூ. 8,100 கோடி

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு - ரூ.40,000 கோடி

No comments:

Post a Comment