இன்ஜி., கவுன்சிலிங் ஜூன் 22ல் பதிவு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, May 21, 2020

இன்ஜி., கவுன்சிலிங் ஜூன் 22ல் பதிவு

தமிழக உயர் கல்வித்துறை சார்பிலான, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, ஜூன், 22ல் துவங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப பணிகள் துவங்கியுள்ளன.

பிளஸ் 2 முடிக்கும் மாணவ - மாணவியர், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பட்டப்படிப்பில் சேருவதற்கு, தமிழக அரசின், ஒற்றை சாளர ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.


தமிழக உயர் கல்வித்துறை சார்பில், அண்ணா பல்கலை வழியே, பல ஆண்டுகளாக கவுன்சிலிங் நடத்தப்பட்டு வந்தது. 2019 முதல், தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை வழியாக நடத்தப்படுகிறது.ஆன்லைனிலேயே விண்ணப்பித்து, ஆன்லைனிலேயே மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, இடங்கள் ஒதுக்கப்படும்.

இதில், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படும்


.ஒவ்ேவார் ஆண்டும், ஜூலையில் கவுன்சிலிங் நடத்தி, ஆகஸ்டில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும். இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பிரச்னையால், மாணவர் சேர்க்கையை ஒரு மாதம் தள்ளி வைத்து, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.


அதன்படி, இந்த ஆண்டு, பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கான, இன்ஜினியரிங் சேர்க்கை கவுன்சிலிங், ஆகஸ்டில் நடக்கிறது. அதற்கு முன், ஜூன், 22 முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவுகளை துவங்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


இதற்கான முதற்கட்ட பணிகளை, தொழில்நுட்ப கல்வித்துறை இயக்குனரகம் துவங்கியுள்ளது. மாணவர்களின் விண்ணப்ப பதிவுக்கான இணையதளம் உருவாக்குதல், மாவட்டங்களில் கவுன்சிலிங் உதவி மையங்கள் அமைத்தல் போன்ற பணிகள் துவங்கியுள்ளதாக, உயர்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment