குடும்ப வன்முறை புகார்களுக்கு தீர்வு காண 'வாட்ஸ் ஆப்' குழு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, May 21, 2020

குடும்ப வன்முறை புகார்களுக்கு தீர்வு காண 'வாட்ஸ் ஆப்' குழு

 குடும்ப வன்முறை புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க, 'தாய் வீடு' என்ற, 'வாட்ஸ் ஆப்' குழு துவங்கப்பட்டிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது

.ஊரடங்கு காலத்தில், அதிகரிக்கும் குடும்ப வன்முறையை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் மனு தாக்கல் செய்தார்.இம்மனுவுக்கு, சமூக நலத்துறை செயலர் மதுமதி தாக்கல் செய்த, கூடுதல் அறிக்கை

:குடும்ப வன்முறை புகார்களுக்கு தீர்வு காணும் அதிகாரிகளின் தொடர்பு எண் விபரங்கள், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலியில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங்களுடன் இணைந்த, மகளிர் சிறப்பு பிரிவு விபரங்களும் வழங்கப்பட்டுள்ளன.கிராமங்களில், குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள், அங்கன்வாடி ஊழியர்களை தொடர்பு கொள்ளலாம். அவர்கள், மாவட்ட சமூக நல அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பர்.


மாவட்ட சமூக நல அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளின் தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.மாவட்டங்களில் இருந்து, சமூக நலத் துறை தினசரி அறிக்கை பெறுகிறது.

ஊரடங்கு நேரத்தில், 616 புகார்கள் பெறப்பட்டன. குடும்ப வன்முறை புகார்கள் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க, 'தாய் வீடு' என்ற, 'வாட்ஸ் ஆப்' குழு துவங்கப்பட்டுள்ளது.

‌ விசாரணை ‌

இதில், சமூக நலத்துறை செயலர், ஆணையர், மாவட்ட சமூக நல அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.குடும்ப வன்முறையை கட்டுப்படுத்த, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இவ்வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகினர். விசாரணையை, ஜூன், 5க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment