கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத 33 நாடுகளின் பட்டியல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 1, 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத 33 நாடுகளின் பட்டியல்

உலகளவில் 33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், 33 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை.


ஏப்.20, 2020 நிலவரப்படி, ஐ.நா அங்கீகரித்துள்ள 247 நாடுகளில் 214 நாடுகளில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. அதில் 190 பேர் உள்ளூரில் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

214 நாடுகளில் குறைந்தபட்சம் 166 நாடுகள் கொரோனாவால் உயிரிழப்பை சந்தித்துள்ளன. வடகொரியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு குறித்த தகவல் இல்லை. கொரோனா தொடர்பான தகவல்களை வடகொரியா ரகசியமாக வைத்திருக்கலாமென கருதப்படுகிறது.

இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத நாடுகள், பிரதேசங்கள் குறித்து பார்ப்போம்.


1. ஐரோப்பாஆலண்ட் தீவுகள், ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயன் தீவுகள்

2. லத்தீன் அமெரிக்கா: போவெட் தீவு, தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள்


3. ஆசியா: வடகொரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான்

4. ஆப்பிரிக்கா: பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி, கொமொரோஸ், பிரெஞ்சு தெற்கு பிரதேசங்கள் , லெசோதோ, செயிண்ட் ஹெலினா

5. ஓசியானியா (பசுபிக் கடல் ): அமெரிக்கன் சமோவா, கிறிஸ்துமஸ் தீவு, கோகோஸ் (கீலிங்) தீவுகள் ,குக் தீவுகள் ஹார்ட் தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகள்,

 கிரிபாடி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா (கூட்டாட்சி நாடுகள்) நெளரு, நியு, நோர்போக் தீவு, பலாவ், பிட்காயிர்ன், சமோவா, சாலமன் தீவுகள், டோக்கலாவ், டோங்கா, துவாலு, யுனைடெட் ஸ்டேட்ஸ் மைனர் அவுட்லைடிங் தீவுகள் வானுட்டு, வாலிஸ் மற்றும் புட்டுனா தீவுகள்

.இது தவிர, கொரோனா பாதிப்பு பதிவான நிலையில், எந்தவொரு உயிரிழப்பும் இல்லாமல் அங்குவிலா, கிரீன்லேண்ட், செயிண்ட் பர்தலோமி, செயிண்ட் லூசியா, ஏமன் உள்ளிட்ட 5 நாடுகளில் அனைவரும் குணமடைந்துள்ளனர்.


கொரோனா தொற்று அருகில் உள்ள அண்டை நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், தொலை தூரத்தில் அமைந்திருப்பதால் தீவுகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. சில நாடுகள் உடனடியாக தங்கள் நாட்டு எல்லையை உடனடியாக மூடியதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பியுள்ளன.

No comments:

Post a Comment