கொரோனா சிறப்பு முகாம்களாக 3,500 படுக்கையுடன் 35 பள்ளிகள் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, May 11, 2020

கொரோனா சிறப்பு முகாம்களாக 3,500 படுக்கையுடன் 35 பள்ளிகள்

 சென்னையில், 3500 படுக்கை வசதிகளுடன், 35 பள்ளிகள், கொரோனா சிறப்பு முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை. தலைநகர் சென்னையில், கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


மருத்துவமனைகள் நிரம்பி வருவதால், பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் திருமண மண்டபங்களை தனிமைப்படுத்தும் சிறப்பு முகாம்களாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்தது


. இது குறித்து, சென்னை மாநகராட்சியும், மாவட்ட கலெக்டரும், பள்ளி கல்வி துறைக்கு, கடிதம் எழுதியதை அடுத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கொரோனா சிறப்பு முகாம்களாக தயார் செய்யப்பட்டுள்ளன.


முதற்கட்டமாக, 35 பள்ளிகள், தலா, 100 படுக்கைகளுடன் தயாராகி உள்ளன. அவற்றில் அடிப்படை வசதிகளாக, குடிநீர், கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும், தலா, 25 அறைகளில், தலா, நான்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


பள்ளி வகுப்பறைகளில் உள்ள, மூன்று பெஞ்சுகளை, ஒரு நபருக்கான கட்டிலாக பயன்படுத்த, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்த அறிக்கையை, சென்னை கலெக்டருக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment