முழு சம்பளத்தை வழங்குங்க! ; கல்லூரிகளுக்கு அறிவுரை - Minnal Kalvi Seithi

Breaking

Monday, May 11, 2020

முழு சம்பளத்தை வழங்குங்க! ; கல்லூரிகளுக்கு அறிவுரை

பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, சம்பள பாக்கியை தாமதமின்றி வழங்கும்படி, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.


கொரோனா ஊரடங்கால், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தாலும், ஊழியர்களுக்கு கட்டாயம் சம்பளம் தர வேண்டும் என, மத்திய அரசு அறிவித்தது. அதை பின்பற்றி, நாட்டில் உள்ள அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், ஏப்ரலில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.அதில், 'அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளும், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, மாத சம்பளத்தை, எந்தவித பாக்கியும் இன்றி வழங்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், நேற்று மீண்டும், ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பு: சில கல்லுாரிகள், தங்களின் பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, பிப்ரவரி, மார்ச் மாத சம்பளத்தை இன்னும் வழங்கவில்லை என, புகார்கள் வந்துள்ளன. தேசிய அளவிலான பேரிடர் மற்றும் நெருக்கடியான நிலையை சமாளிக்க வேண்டிய நிலையில், அரசின் உத்தரவை அமல்படுத்தாமல், கல்லுாரிகள் அலட்சியமாக இருக்க கூடாது.பணியாளர்கள் குடும்பத்தினரின் நிலை கருதி, உடனடியாக முழு சம்பளத்தையும், கல்லுாரி நிர்வாகங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment