ஊரடங்கு சமயத்தில் நடைபெற்ற மிகப் பெரும் திருட்டு(3 கோடி மதிப்புள்ள முகக்கவசங்கள்) - Minnal Kalvi Seithi

Breaking

Monday, May 11, 2020

ஊரடங்கு சமயத்தில் நடைபெற்ற மிகப் பெரும் திருட்டு(3 கோடி மதிப்புள்ள முகக்கவசங்கள்)

பிரிட்டனில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான முக கவசங்களை வேன்களில் வந்து கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனின் புகழ் பெற்ற தொழில் நகரமான மான்செஸ்டரின் புறநகர் பகுதி சல்போர்ட். இங்குள்ள மருத்துவ உபகரணங்கள் சேமிப்பு குடோன் ஒன்றில் கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய சுகாதார சேவை பணியாளர்களுக்கு வழங்குவதற்காக 1 லட்சத்து 66 ஆயிரம் பவுண்டுகள் மதிப்பிலான 80 ஆயிரம் முக கவசங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அப்படியிருக்க , நேற்று முன்தினம் நள்ளிரவு 3 வேன்களில் வந்த 3 மர்ம நபர்கள் இந்த குடோனுக்குள் புகுந்து 80 ஆயிரம் முக கவசங்களையும் திருடியுள்ளனர்.

பின்னர் தாங்கள் வந்த வேன்களில் அவற்றை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment