அங்கன்வாடி குழந்தைகளுக்கு நினைவூட்டல் வகுப்புகள் தொடக்கம்- பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, May 11, 2020

அங்கன்வாடி குழந்தைகளுக்கு நினைவூட்டல் வகுப்புகள் தொடக்கம்- பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பு

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடந்த ஓர் ஆண்டாக கற்பித்தபாடங்களை வாட்ஸ் அப் வீடியோக்கள் மூலம் நினைவூட்டும்வகுப்புகள் தொடங்கியுள்ளன.

வாட்ஸ் அப் வீடியோக்கள்

கரோனா ஊரடங்கால் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், குழந்தைகளின் படிக்கும் திறன் தடைப்படாமல் இருக்க வாட்ஸ் அப் வீடியோக்கள் மூலம் பாடம் கற்கும் புதிய முறையை அங்கன்வாடி பணியாளர்கள் கடந்த மாதம் தொடங்கினர்.இது பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அங்கன்வாடி மையங்கள் திறந்திருக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கடந்த ஓர்ஆண்டில் கற்பித்த பாடங்களைகுழந்தைகளுக்கு நினைவூட்டுவது வழக்கம்.

தற்போது மையங்கள் மூடப் பட்டுள்ளதால் வாட்ஸ் அப் வீடியோக்கள் மூலம் இதை செயல்படுத்தி வருகிறோம்.


பெற்றோர் மற்றும் குழந்தைகள் மத்தியில் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மற்றும் குழுக்களில் பகிரப்படும் வீடியோக்கள் நல்லவரவேற்பை பெற்றதும், நினைவூட்டல் வகுப்புகளை எடுப்பதற்கு முக்கிய காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment