ரூ 56,000 சம்பளத்தில் மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 25, 2020

ரூ 56,000 சம்பளத்தில் மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள கெமிக்கல் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 மொத்தம் 06 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ)

மொத்த காலிப் பணியிடங்கள் : 10

பணி : கெமிக்கல் இன்ஜினியர்

கல்வித் தகுதி : B.Tech Chemical Engineering

வயது வரம்பு :

28 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மேற்கண்ட பணியிடத்திற்கு மாதம் ரூ.56,100 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 


https://rac.gov.in/index.php?lang=en&id=0 


என்னும் இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment