62 மாணவர்களின் குடும்பத்தினருக்கு, தன் சொந்தப் பணத்தில், தலா, 1,000 ரூபாய் வழங்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 1, 2020

62 மாணவர்களின் குடும்பத்தினருக்கு, தன் சொந்தப் பணத்தில், தலா, 1,000 ரூபாய் வழங்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை, 62 மாணவர்களின் குடும்பத்தினருக்கு, தன் சொந்தப் பணத்தில், தலா, 1,000 ரூபாய் வழங்கினார்.

 அரியலுார், துாப்பாபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 34 மாணவர், 28 மாணவியர் படிக்கின்றனர். இவர்களது பெற்றோர், பெரும்பாலும் விவசாயக் கூலி தொழிலாளர்கள்.


இவர்கள், வேலைக்கு செல்ல இயலாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி, பள்ளியில் படிக்கும், 62 மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தலா, 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்க முடிவு செய்தார்.

இதன்படி, ஒவ்வொரு மாணவர்களின் வீடுகளுக்கும் நேரில் சென்று, பெற்றோரிடம் பணத்தை வழங்கி, கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

No comments:

Post a Comment