பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் பட்டியல் ஜூன் 6-க்குள் அனுப்ப உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 25, 2020

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் பட்டியல் ஜூன் 6-க்குள் அனுப்ப உத்தரவு

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை ஜூன் 6-க்குள் அனுப்பு மாறு அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) எஸ்.நாகராஜமுருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:

அனைத்து அரசு, நகராட்சி உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் 1.06.2020 நிலவரப்படி நிரப் பத் தகுந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங் களை ஜூன் 6-க்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

 இந்த விவரங்களை அனுப்பும் போது 1.08.2019 பணியாளர் நிர்ண யத்தின்படி ஆசிரியர் இன்றி உபரி எனக் கண்டறிந்து, இயக்குநரின் பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக் கப்பட்ட பணியிடங்களையும், கூடு தல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங் களாக கருதக் கூடாது.இவ்வாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2020-2021 வருடாந்திர தேர்வுக் கால அட்டவணைப்படி, 730 இடைநிலை ஆசிரியர் காலியிடங் களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு பற்றிய அறிவிப்பு வரும் ஜூலை 9-ம் தேதியும், அதேபோல், 572 பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களுக்கான அறிவிப்பு ஜூலை 17-ம் தேதியும் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment