AIRTEL பயனாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தா இலவசம். - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 31, 2020

AIRTEL பயனாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தா இலவசம்.

AIRTEL பயனாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தா இலவசம்.
நீங்கள் ஏர்டெல் யுசராக இருந்தால் ஒரு ஆண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தா இலவசம். அதனை எப்படி செய்வது குறித்து இதில் காணலாம்.

ஏர்டெல் நிறுவனம், மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டி போடும் வகையில் பல சலுகைகளை வழங்கிவருகிறது. 

அதில் குறிப்பாக, இலவச மொபைல் செக்யூரிட்டி, இலவச இ-புத்தகங்கள், இலவச சந்தாக்கள், இலவச ஸ்மார்ட்போன் செக்யூரிட்டி போன்ற பல சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தாவை இலவசமாக அளிக்கிறது. இதன்மூலம் படங்கள், அமேசானில் எந்த பொருள் வாங்கினாலும் 1 டே டெலிவரி, ப்ரைம் விற்பனைக்கான ஆரம்பகால அணுகல், அமேசான் பொருட்களில் சிறப்பு சலுகைகள், விளம்பரங்களின்றி பாடல்கள், போன்ற நல்ல சலுகைகளை அளிக்கிறது.

அதனை எப்படி பெறுவது:'

இதனை பெறுவதற்கு போஸ்ட்பேயிட் பயனாளர்கள் ரூ.499 அல்லது அதற்க்கு மேற்பட்ட திட்டத்தில் இருக்க வேண்டும். ப்ரீப்பேயிடு பயனாளர்கள் ரூ.349 அல்லது அதற்க்கு மேல் ரிசார்ஜ் செய்தால் ப்ரைம் மேம்பர்ஷிப் கிடைக்கும். 

ஆனால், பிராட்பேண்ட் பயனர்கள் ரூ.999 அல்லது அதற்கு மேற்பட்ட கட்டணம் செலுத்தினால் இந்த சலுகை கிடைக்கும். ஆனால் இந்த சலுகை, டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது.

முதலில் ப்லே ஸ்டோரில் இருந்து ஏர்டெல் ஆப்பை பதிவிறக்கவும்.

அடுத்து உங்களது மொபைல் எண்ணை பயன்படுத்தி ஆப்பில் லாகின் செய்து, Discover Airtel Thanks என்பதை தேர்வு செய்யவும்.

அதன்பின்னர் கீழே சென்று அமேசான் ப்ரைம் மெமம்பர்ஷிப் விருப்பத்தை தேடவும்.

அடுத்து, கிளைம் பட்டனை தொடவும்.

இறுதியாக, அமேசான் ப்ரைம் லாக்-இன் பக்கத்திற்கு கொண்டு செல்லும், அங்கு உங்களுக்கான ரீவார்டை பெற அதில் லாகின் செய்ய வேண்டும்.

இறுதியாக, உங்களுக்கான இலவச ப்ரைம் சந்தா உங்களுக்கு வந்துவிடும்.

No comments:

Post a Comment