பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 31, 2020

பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்





பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக தமிழகத்தை சேர்ந்தவரும், சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவருமான மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 


இதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையில் நடந்த நியமன குழு அளித்துள்ளது. 1991ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பேட்ஜ் அதிகாரியான அவர் தற்போது, தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் செயலாளராக உள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி.,யில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்த அவர், பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம்., மில் பட்ட மேற்படிப்பு படித்துள்ளார். டெவலெட்மென்ட் ஸ்டடிஸ் தொடர்பாக நெதர்லாந்தின் ரோட்டார்டேமில் உள்ள எஸ்ராமஸ் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார்.

அமைச்சரவை நியமன குழுவானது, பீஹார் கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதரை, இணை செயலாளராகவும், ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீரா மொகந்தியை பிரதமர் அலுவலகத்தின் இயக்குநராகவும் நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது

.2001ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான ஸ்ரீதர், விவசாயத்துறையில் பட்டமேற்படிப்பு பெற்றுள்ளார். மேலும் மரபியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். தற்போது, முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகடமியில் மூத்த இணை இயக்குநராக பதவி வகித்து வருகிறார். மீரா மொகந்தி, அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment