கொரோனா போரில் முன்நின்று பணியாற்றுபவர்களுக்கு முப்படைகள் மரியாதை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 2, 2020

கொரோனா போரில் முன்நின்று பணியாற்றுபவர்களுக்கு முப்படைகள் மரியாதை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் களப்பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு இந்திய ராணுவம் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

உலகம் முழுவதையும் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2 மாதங்களாக உலக இயகத்தை நிறுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவ உலகத்தின் போராட்டம் இன்றியமையாதது. 



நோய் தொற்று பரவலை பொருட்படுத்தாமல் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்கள், தூய்மைப் பணியர்கள், தன்னார்வலர்களுக்கு இந்த நேரத்தில் போற்றப்பட வேண்டியவர்கள்.

அவர்களை சிறப்பிக்கு, தேர்ந்தெடும் பொருட்டு இந்திய ராணுவத்தின் முப்படைகள் சார்பில், வானில் இருந்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் என்று முப்படைகளிள் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார்

அந்தவகையில் டெல்லியில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, நாட்டின் பிறபகுதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மிக்-29, சுகோய்-30, ஆகிய விமானங்கள் டெல்லி வான்பரப்பில் 30 நிமிடங்கள் பறந்து மரியாதை செலுத்தியது


அதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீர் தால் ஏரி மேற்பரப்பில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பறந்து தங்கள் மரியாதையை செலுத்தினர். 


அதேபோல தலைநகர் டெல்லியில் இந்தியா கேட், தேசிய காவல்துறை நினைவு அருங்காட்சியகம், ஆர்எம்எல் மருத்துவமனை உட்பட பல்வேறு பகுதிகளின் மேற்புறங்களின் மீது இந்திய விமானப்படையின் விமானங்கள் பறந்து கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்களின் சேவையை பாராட்டினர்.


சென்னையில் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் ராணுவம் செலுத்திய மரியாதைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மருத்துவர்கள், செவிலியர்கள் கைகளை உயர்த்தி நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment