நுழைவு தேர்வு நடத்திய பள்ளிக்கு பூட்டு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, May 20, 2020

நுழைவு தேர்வு நடத்திய பள்ளிக்கு பூட்டு

கூடலுாரில், மாணவருக்கு நுழைவுத் தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு, அதிகாரிகள் பூட்டு போட்டனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் உள்ள தனியார் பள்ளி திறந்து செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.


 தொடர்ந்து, தாசில்தார் சங்கீதாராணி, நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ், சாந்தி ஆகியோர் பள்ளியை ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது, பள்ளி அலுவலகம் திறந்து செயல்படுவதும், மாணவர் சேர்க்கைக்காக வகுப்பறையில் மாணவர் ஒருவருக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதும் தெரியவந்தது.


 தொடர்ந்து, பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் வெளியேற, அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின், பள்ளிக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு சாவியை எடுத்து சென்றனர்.நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில்,''பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது, மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு நடத்துவது தெரியவந்தது. அரசு உத்தரவு மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment