காவல்துறையில் புதிதாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, May 20, 2020

காவல்துறையில் புதிதாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு

காவல் துறை, தீயணைப்பு மற்றும் சிறைத்துறைக்கு, புதிதாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, ஜூன் மாத இறுதியில் அறிவிக்கப்படும்' என, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்து உள்ளது.


தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, எஸ்.ஐ.,க்கள் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, தேர்வு செய்யப்படுகின்றனர்.

புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு, எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்படும். அதற்கு, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.காவல் துறை உள்ளிட்ட மூன்று துறைகளுக்கும், இந்த ஆண்டு புதிதாக ஆள் சேர்க்கும் பணி நடக்க இருக்கிறது.

அதற்கான அறிவிப்பு, ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் என, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது.மேலும், விண்ணப்பத்தாரர்கள், ஆன்லைன் வசதியை பயன்படுத்த, மாநிலம் முழுதும், கணினி மையங்கள் திறக்கப்பட்டுள்ளதா


 என்பது குறித்து, அறிக்கை அளிக்குமாறு, கமிஷனர்கள் மற்றும் மாவட்ட, எஸ்.பி.,க்களுக்கு, சீருடை பணியாளர் தேர்வு குழுமம், நேற்று முன்தினம், சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.இந்த தகவல் வெளியானதை ஒட்டி, காவலர் பணியில் சேர, வாலிபர்கள், இளம் பெண்கள் மற்றும் திருநங்கையர் தயாராகி வருகின்றனர்.

No comments:

Post a Comment