வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தபால்காரை அனுகினால் உடனடியாக பணம் வழங்கப்படும் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 10, 2020

வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தபால்காரை அனுகினால் உடனடியாக பணம் வழங்கப்படும்

வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க தபால்காரரை அணுகினால்உடனடியாக பணம் வழங்கப்படும் திட்டம்அஞ்சலதுறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.


மத்திய, மாநில அரசுகள்பயனாளிகளுக்கு வங்கிகள்மூலம் நிவாரணத் தொகையை வரவு வைக்கின்றனர். கொரோனா பாதிப்பால் ஏ.டி.எம்., மற்றும் வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.இதையடுத்து அஞ்சல் துறை மூலம் வீட்டில் இருந்தபடியே அவரவர் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கு ஒவ்வொருவரும்தங்களது வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும்.


ஏ.இ.பி.எஸ்., (ஆதார் எனேபில்டு பேமென்ட் சிஸ்டம்) வசதியை பயன்படுத்தி தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம தபால் ஊழியர்கள் மூலம் பணம் எடுக்க முடியும். அப்போது விரல் ரேகை மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டு வாடிக்கையாளர் கேட்கும் பணத்தை அளிக்க முடியும். இதன் மூலம் ரூ. 10 ஆயிரம் வரை கட்டணம் இன்றி பெறலாம்.

No comments:

Post a Comment