இலவச சிலிண்டர் பணம் வங்கி கணக்கில் வரவு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 10, 2020

இலவச சிலிண்டர் பணம் வங்கி கணக்கில் வரவு

தமிழகத்தில், 'பிரதான் மந்திரி உஜ்வாலா' திட்ட பயனாளிகள், இம்மாதம், காஸ் சிலிண்டர் வாங்குவதற்கான பணத்தை, அவர்களின் வங்கி கணக்கில், எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தியுள்ளன.மத்திய அரசின், பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தில், ஏழை மக்களுக்கு, இலவசமாக காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெறுவோர், காஸ் இணைப்புக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை; சிலிண்டருக்கு மட்டுமே, பணம் செலுத்த வேண்டும்


.தமிழகத்தில், உஜ்வாலா திட்டத்தில், இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், 32.43 லட்சம் பேருக்கு, காஸ் இணைப்பு வழங்கி உள்ளன.ஊரடங்கால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு, ஏப்ரல் முதல், ஜூன் வரை, மாதத்திற்கு ஒன்று என, மூன்று காஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்கும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.அதன்படி, உஜ்வாலா பயனாளிகளின் வங்கி கணக்குகளில், சிலிண்டருக்கான முழு தொகையை, எண்ணெய் நிறுவனங்கள், முன்கூட்டியே செலுத்தும். 

அதை எடுத்து, சிலிண்டர் வாங்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள, உஜ்வாலா பயனாளிகளின் வங்கி கணக்குகளில், ஏப்ரல் மாத சிலிண்டருக்கான பணம், தலா, 761.50 ரூபாயை, எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தின. அதில், 25 சதவீதம் பேர் சிலிண்டர் வாங்கவில்லை.

இதையடுத்து, அவர்கள் தவிர, மற்ற பயனாளிகளின் வங்கி கணக்குகளில், இம்மாதம் காஸ் சிலிண்டர் வாங்க தேவையான, 569.50 ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தியுள்ளன.

No comments:

Post a Comment