ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 10, 2020

ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்

ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு, வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., வழியாக, பல்வேறு மாநிலங்களில், ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள் செயல்படுகின்றன.இவற்றில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஒருங்கிணைந்த நான்காண்டு கல்வியியல் படிப்பை படிக்க, பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவு தேர்வுக்கு, மார்ச்சில் முடிவதாக இருந்த, 'ஆன்லைன்' பதிவு, வரும், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வரை, தேர்வுக்கான விண்ணப்பங்கள்,ஆன்லைனில் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.

1 comment: