சமூக வலைத்தளங்களில் வரும் இந்த செய்திகளை நம்ப வேண்டாம் எஸ்பிஐ விளக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 10, 2020

சமூக வலைத்தளங்களில் வரும் இந்த செய்திகளை நம்ப வேண்டாம் எஸ்பிஐ விளக்கம்

அவசர கடன் வழங்குவதாக, சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது.


இது குறித்து, எஸ்.பி.ஐ., தன், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்ட தகவல்:'யோனோ' செயலி வாயிலாக, அவசர கடன் வழங்குவதாக, சமூக வலைதளங்களில், வதந்திகள் உலா வருகின்றன. அதுபோன்ற, எந்த ஒரு கடன்களும் தற்போது வழங்கப்படவில்லை. இந்த வதந்திகளை, வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம். 
இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றால், பணப்புழக்கம் குறைந்த வாடிக்கையாளர்களுக்கு உதவ, முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட கடன்களை வழங்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.எ ஸ்.பி.ஐ.,யில் சம்பள கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, யோனோ செயலி வாயிலாக, இந்த கடன் வழங்கப்படும்.இந்த நடவடிக்கைகள் முடிந்ததும், இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment