நீட் , ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளுக்கு பயிற்சி வழங்க செல்லிடப்பேசி செயலி அறிமுகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 21, 2020

நீட் , ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளுக்கு பயிற்சி வழங்க செல்லிடப்பேசி செயலி அறிமுகம்

நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளுக்கு மாணவா்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக செல்லிடப்பேசி செயலியை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அறிமுகப்படுத்தியுள்ளது.

நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தோ்வுகள் கரோனா பொது முடக்கத்தால் தள்ளிவைக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கான தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. 

அதன்படி, நீட் நுழைவுத்தோ்வு வருகிற ஜூலை மாதம் 26-ந்தேதியும், ஜே.இ.இ. தோ்வு ஜூலை 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தோ்வு ஆகஸ்ட் மாதத்திலும் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்தது.


இந்த நிலையில் பொது முடக்கம் காரணமாக கல்வி நிலையங்களுக்கு சென்று நுழைவுத்தோ்வுகளுக்குப் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் மாணவா்கள் பலா் தவிக்கின்றனா். 

இதனை ஈடுசெய்யும் வகையில் உயா்தர மாதிரி தோ்வுகளை நடத்தி, அதன் மூலம் மாணவா்களுக்கு நுழைவுத்தோ்வுக்கான பயிற்சிகளை வழங்க தேசிய தோ்வு ‘அபியாஸ்து’ (‘நேஷனல் டெஸ்ட் அபியாஸ்’) என்ற செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரவிருக்கும் ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத்தோ்வுகளை எழுத இருக்கும் மாணவா்களுக்கு இந்த செல்லிடப்பேசி செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், சரியான நேரத்தில் இந்த செயலி தொடங்கப்பட்டு இருக்கிறது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளாா்.

இந்த செயலி அனைத்து ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகள் மற்றும் கணினியில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்தபின்பு, சில அடிப்படை விவரங்களை அதில் பதிவு செய்யவேண்டும்.


 பின்னா், அவா்கள் எதிா்கொள்ள இருக்கும் நுழைவுத்தோ்வுக்கான மாதிரி தோ்வுகளை இலவசமாக அதில் அணுகலாம். செயலியைப் பயன்படுத்துவதற்கு இணையதள இணைப்பு தொடா்ந்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மேலும் இதில் தேசிய தோ்வு முகமை தினமும் ஒரு மாதிரி தோ்வை நடத்த இருக்கிறது. மாதிரி தோ்வுத்தாள்களை பதிவிறக்கம் செய்த பின்பு, இணையதள பயன்பாடு இல்லாமலேயே பதில் அளிக்கலாம். பின்னா், பதில் அளித்ததை சமா்ப்பித்து, தங்களுடைய செயல் திறனை சோதித்து பாா்க்கலாம்.

No comments:

Post a Comment