ரயில் நிலையங்களில் இவற்றிற்கு அனுமதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 21, 2020

ரயில் நிலையங்களில் இவற்றிற்கு அனுமதி

ரயில் நிலையங்களில் உணவகங்கள், புத்தக நிலையங்கள், மருந்துக் கடைகள் உள்ளிட்டவற்றை உடனடியாக திறக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மண்டல ரயில்வே மற்றும் மற்றும் ஐ.ஆா்.சி.டி.சி ஆகியவற்றுக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


நாட்டில் பொது முடக்கம் 4-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவிப்பில் உள்ள தளா்வுகளைச் சுட்டிக்காட்டி பல நிறுவனங்கள், அரசுத் துறைகள் செயல்படத் தொடங்கிவிட்டன. 

இதுதவிர, குளிா்சாதன வசதி இல்லாத 200 பயணிகள் ரயில் ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில் நிலையங்களில் உணவகங்கள், புத்தக நிலையங்கள், மருந்துக் கடைகள் உள்ளிட்டவற்றை உடனடியாக திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மண்டல ரயில்வே மற்றும் மற்றும் ஐ.ஆா்.சி.டி.சி ஆகியவற்றுக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:


கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ரயில் நிலையங்களில் செயல்பட்டு வந்த உணவகங்கள், புத்தக நிலையங்கள், மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

 தற்போது இவற்றை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. கடைகள் திறக்கப்படும் பட்சத்தில் கண்டிப்பாக கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளபட வேண்டும். சமைத்த உணவு விற்கவும் இப்போது அனுமதி வழங்கப்படுகிறது.

அதேவேளையில், அமா்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. பாா்சல் உணவுகள் விற்றுக் கொள்ளலாம். கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக திறக்க மண்டல ரயில்வே மற்றும் ஐ.ஆா்.சி.டி.சி தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment