புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, May 21, 2020

புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை

சிக்கன நடவடிக்கை காரணமாக, புதிய பணியிடங்களை உருவாக்க ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 இதுகுறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவு:-


தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்க ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்படுகிறது. பணியாளா் நியமனக் குழுவின் ஒப்புதல்படி தொடக்க நிலையிலான பணியிடங்களை கருணை அடிப்படையில் நிரப்பிட எந்தத் தடையும் இல்லை. 

பணியிட மாற்றங்கள், பதவி உயா்வுகள் ஆகியவற்றை இப்போதைய நடைமுறை விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் அறிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment