ஒரு துடிக்கும் இதயத்தின் துடிதுடிப்பான பயணம்... - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 9, 2020

ஒரு துடிக்கும் இதயத்தின் துடிதுடிப்பான பயணம்...

இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு வாழ்வு வழங்குவதற்காக மாற்று இருதயம் முதல் முறையாக ெஹலிகாப்டரில் பறந்து வந்தது.


கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிம் மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இதய நோய் காரணமாக ஒரு நாற்பது வயது பெண் அனுமதிக்கப்பட்டார்.


கடுமையான இதய நோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த இவருக்கு யாராவது மாற்று இருதயம் கொடுத்தால் மட்டுமே இவர் பிழைக்க முடியும் என்ற நிலை.தனக்கு மாற்று இருதயம் தரவேண்டி பல இடங்களில் இணையங்களிலும் பதிவு செய்து வைத்திருந்தார்.


இந்த நிலையில் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள லிஸ்சி மருத்துவமனையில் லாலி என்ற ஐம்பது வயது பள்ளி ஆசிரியை அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.மூளையில் ரத்த கசிவு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரை எவ்வளவோ முயற்சித்தும் காப்பாற்ற முடியவில்லை மூளைச்சாவு நிலைக்கு தள்ளப்பட்டார்.


இந்த நிலையில் அம்மாவின் ஆசை தனக்கு ஏதாவது ஒன்று என்றால் தனது உடல் உறுப்புகளை தானம் செய்யவேண்டும் என்பது ஆகவே பயன்படும் உறுப்புகளை எடுத்தக் கொள்ளுங்கள் என்று அவரது மகள் மருத்துவ மனையில் கூறினார்.


அந்த நேரம்தான் திருவனந்தபுரத்து நோயாளிக்கு இதயம் தேவை என்ற தகவல் கவனத்திற்கு வந்தது.அடுத்து வேக வேகமாக வேலைகள் நடந்தது.கொச்சியில் உள்ளவரின் இதயத்தை எடுத்து அதை எவ்வளவு சீக்கிரம் பொருத்துகிறோமோ அவ்வளவு சீக்கிரம் நல்லது 


ஆனால் கொச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரோடு வழியாக எப்படி சென்றாலும் நான்கு மணி நேரமாகும் ஒரு மணி நேர அவகாசம்தான் சரியானது என்பதால் என்ன செய்யலாம் என்று கவலைப்பட்டனர்.


தகவல் கிடைத்த கேரளா போலீஸ் உதவிக்கு வந்தனர் மாவோயிஸ்ட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வாடகைக்கு வாங்கியிருந்த தங்கள் ெஹலிகாப்டரை முதல் முறையாக இந்த மருத்துவ உதவிக்கு இலவசமாக தந்து உதவினர்.



கொரோனா காரணமாக ரோடுகளில் போக்கு வரத்து இல்லை நேற்று காலை பத்து மணிக்கு திருவனந்தபுரம் மருத்துவமனை இதயநோய் நிபுணர் ஜோஸ் சாக்கோ கொச்சி வந்தார்.கொச்சியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையின் ஆசிரியையிடம் இருந்து இதயம் பத்திரமாக அகற்றப்பட்டது.


துடிக்கும் அந்த இதயத்தை பெட்டியில் எடுத்துக் கொண்ட டாக்டர் ஒரு ஆம்புலன்ஸ் மூலமாக 2:40 க்கு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு 2:45 க்கு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.


அங்கு தயராக இருந்த ஹெலிகாப்டரில் கிளம்பி நாற்பது நிமிடத்தில் திருவனந்தபுரத்தில் மருத்துவமனை அருகே இருந்த மைதானத்தில் தரை இறங்கினார் அங்கு தயராக இருந்து ஆம்புலன்சில் கிளம்பி ஐந்து நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்தார்.



அங்கே ஆபரேசன் தியேட்டரில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்த நிலையில் தேவைப்பட்ட நோயாளிக்கு மாற்று இருதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது டாக்டர் ஜோஸ் மற்றும் அவரது குழுவினருக்கு பெருத்த நிம்மதியும் ஏற்பட்டது.

இது அனைத்தையும் கையில் வாக்கி டாக்கி வைத்துக் கொண்டு செயல்படுத்திய போலீஸ் கமிஷனர் விஜய் சக்கரா முகத்தில் சின்ன புன்னகை அந்த புன்னகைக்கு பின்னால் ஒரு உயிரைக்காப்பாற்றிய திருப்தியும் சந்தோஷமும் இருந்தது.-எல்.முருகராஜ்

No comments:

Post a Comment