விடைத்தாள்கள் திருத்தம் செய்வதற்காக ஆசிரியர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படும் - அமைச்சர் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, May 9, 2020

விடைத்தாள்கள் திருத்தம் செய்வதற்காக ஆசிரியர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படும் - அமைச்சர்

CBSE விடைத்தாள் திருத்தம் பணிக்காக நாடு முழுவதும் 3,000 சிபிஎஸ்இ பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.


இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவிக்கையில்,


"விடைத்தாள் திருத்தும் பணிக்காக 3,000 சிபிஎஸ்இ பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களிலிருந்து 1.5 கோடிக்கும் மேலான விடைத்தாள்கள் திருத்தம் செய்வதற்காக ஆசிரியர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படும். இந்தப் பணி சுமார் 50 நாள்களில் நிறைவடையும்" என்றார்.


முன்னதாக வெள்ளிக்கிழமை 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான நிலுவையில் இருக்கும் பொதுத்தேர்வு பற்றி பேசிய அவர், "சிபிஎஸ்இ தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்று மாணவர்கள் கவலையில் உள்ளனர்.

 நடைபெறாத தேர்வுகள் ஜூலை 1 மற்றும் ஜூலை 15-க்கு மத்தியில் நடத்தப்படும். ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்வுகள், மீண்டும் நடத்தப்படாது" என்றார்.

No comments:

Post a Comment