ஆவணங்களை புதுப்பிக்க அவகாசம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 6, 2020

ஆவணங்களை புதுப்பிக்க அவகாசம்

பிப்ரவரி முதல் காலாவதியான ஓட்டுனர் உரிமங்கள், வாகன உரிமங்களை, அடுத்த மாதம் இறுதி வரை புதுப்பித்துக்கொள்ள, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.




தமிழகத்தில், போக்குவரத்து துறை அலுவலகங்கள், குறைந்த பணியாளர்களுடன் இயங்க துவங்கி உள்ளன. ஆர்.டி.ஓ.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகள், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றதால், பணிபுரியும் அலுவலகங்களுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். 




அதனால், பயனாளிகள், பொறுமையாக தங்களின் ஆவணங்களை புதுப்பித்து கொள்ளலாம் என, போக்கு வரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



 மேலும், காலாவதியான இன்சூரன்ஸ் ஆவணங்களையும் புதுப்பிக்க, ஜூன் வரை அவகாசம் வழங்கும்படி, மத்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம், வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment